
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சர்ச்சைக்குரிய பேச்சாளர் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதாக பாஜக மூத்த தலைவரும் சர்ச்சைக்குரிய பேச்சாளருமான ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காளையார்கோவிலில் செப்.19-ம் தேதி இந்து முன்னணி, பாஜக சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா, முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோரை அவதூறாகவும், மத மோதல்களை உருவாக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கிழக்கு திமுக ஒன்றியச் செயலாளர் ஆரோக்கியசாமி அளித்த புகாரின்பேரில் காளையார்கோவில் போலீஸார் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்புகூட ஹைகோர்ட் என் மயிருக்கு சமானம் என்று கூறி உயர்நீதிமன்றத்தை ஹெச் ராஜா கேவலமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 8:36 am
கொடைக்கானலில் கோடைவிழா: மலர்க் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறது பிரையன்ட் பூங்கா
May 3, 2025, 7:24 pm
தமிழகம் முழுவதும் மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு
May 1, 2025, 7:39 pm