நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

செய்தித் தொலைக்காட்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்: உச்சநீதிமன்றம்

புது டெல்லி:

இந்திய செய்தித் தொலைக்காட்சிகளுக்கான சுய ஒழுங்கு நெறிமுறைகளைக் கடுமையாக்க வேண்டியது அவசியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதற்காக புதிய கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை நான்கு வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என்று செய்தி ஒலிபரப்பு மற்றும் டிஜிட்டல் சங்கத்துக்கு NBDAவுக்கு உத்தரவிட்டது.

ஹிந்தி நடிகர் சுசாந்த் சிங் மரணம் தொடர்பாக சில செய்தித் தொலைக்காட்சிகள் வெளியிட்ட ஊடக விசாரணைச் செய்திகள் நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

மும்பை உயர்நீதிமன்றக் கருத்துகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் என்பிடிஏ வழக்குத் தொடுத்தது. இந்த மனுவை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் இது ஊடகங்களை தணிக்கை செய்ய வழிவகுக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வு, சுய ஒழுங்குமுறை நெறிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும். புதிய நெறிமுறைகள் தாக்கல் செய்ய  NBDA வுக்கு நான்கு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset