நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மோட்டார் சைக்கிள் வீலிங்  செய்தபோது விபத்து; பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் காயம் 

சென்னை: 

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அவர் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கை எலும்பு உடைந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிளேட் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

டிடிப் வாசன் மஞ்சள் வீரன் படத்தின் மூலம் தமிழ்ச்சினிமாவில் அறிமுகமாகிறார். இயக்குனர் செல்அம் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset