நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் ஷாருக்கானின் அடுத்த திரைப்படம் டிசம்பரில் வெளியாகிறது 

மும்பை:

நடிகர் ஷாருக்கானின் அடுத்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.

அது இந்த ஆண்டு ஷாருக்கான் நடித்து வெளியாகும் 3ஆவது திரைப்படம் ஆகும்,

ஆண்டுத் தொடக்கத்தில் பத்தான், சென்ற மாதம் ஜவான், ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் டுங்கி வெளியாக உள்ளது. ஆக ஒரே ஆண்டில் மூன்று வெற்றிப்படங்கள் என்ற இலக்குடன் ஷாருக்கான் களத்தில் குதித்துள்ளார். முதல் 2 படங்களும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ளன. 

ஜவான் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் டுங்கி திரைப்படம் குறித்து ஷாருக்கான் உறுதி செய்தார். 

கடந்த 29 ஆண்டுகளை விட தற்போது கடினமாக உழைப்பதாக அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஜவான் பட இயக்குநர் அட்லீ, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

டுங்கி திரைப்படம் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியாகவுள்ளது.

அதற்கான படப்பிடிப்பு காஷ்மீர், சவுதி அரேபியா, லண்டன் ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.

ஆதாரம்: NDTV 

தொடர்புடைய செய்திகள்

+ - reset