நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராணுவ வீரர்கள் உயிரிழந்தும் கொண்டாட்டம்: பாஜக மீது இந்தியா கூட்டணி கண்டனம்

புது டெல்லி:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவம், காவல் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உயிரிழந்த துக்க தினத்தில் ஜி20 மாநாட்டு வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்திய பாஜகவுக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் விமர்சித்துள்ளன.

அனந்த்நாக் மாவட்டத்தில் புதன்கிழமை காலை  பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் ராணுவ கர்னல் மன்ப்ரீத் சிங், ராணுவ மேஜர் ஆஷிஷ், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஹுமாயூன் பட் ஆகியோர் உயிரிழந்தனர்.

அதே தினத்தில் மாலை தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தற்காக, கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்து கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், இந்தக் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் செய்தித் தொடர்புத் துறை தலைவர் பவண் கெரா வெளியிட்ட பதிவில், 3 அதிகாரிகள் தங்களது உயிரைத் தியாகம் செய்தனர் என்ற துக்கச் செய்தி வெளியான பிறகும் பாஜக தலைமையகத்தில் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும், பாராட்டு பெறும் நிகழ்வை மட்டும் பிரதமரால் ஒத்திவைக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset