நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தில்லி - மத்திய கிழக்கு - ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் பொருளாதார வழித்தடம் - சீனாவின் பதில்

பெய்ஜிங்: 

தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையே இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதற்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்த வழித்தடம் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம், வளர்ந்த நாடுகள் உள்கட்டமைப்புகளை உருவாக்க உண்மையாக உதவும் அனைத்துத் திட்டங்கள், இணைப்பு மற்றும் பொதுவான வளர்ச்சியை ஊக்குவிக்கும் உள்ளார்ந்த முயற்சிகள் ஆகியவற்றை சீனா வரவேற்கிறது.

அதேவேளையில், அவை புவிஅரசியல் கருவிகளாக மாறக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சவால்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை ஜி20 தில்லி பிரகடனம் வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset