
செய்திகள் தமிழ் தொடர்புகள்
உதயநிதியின் சனாதன கருத்துக்கு உடன்படவில்லை: காங்கிரஸ்
புது டெல்லி:
சனாதனம் குறித்த திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் தெரிவித்த கருத்துகளுடன் காங்கிரஸ் கட்சி உடன்படாது என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா தெரிவித்தார்.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி, ஆ.ராசா ஆகியோரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இக் கருத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
பவன் கெரா மேலும் கூறுகையில், ஒவ்வொரு மத நம்பிக்கைகளுக்கும் அவற்றுக்குரிய இடம் மற்றும் மதிப்பளிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது.
ஒரு சமூகம் அல்லது நம்பிக்கைக்கு எதிரான கருத்தை அரசியலமைப்புச் சட்டமும் அனுமதிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை அறிந்தவர்கள், இந்த விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவார்கள். இது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டிருப்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு. இதில் மறுபரிசீலனைக்கு வாய்ப்பே இல்லை என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 8:36 am
கொடைக்கானலில் கோடைவிழா: மலர்க் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறது பிரையன்ட் பூங்கா
May 3, 2025, 7:24 pm
தமிழகம் முழுவதும் மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு
May 1, 2025, 7:39 pm