நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.6,046 கோடி

புது டெல்லி:

இந்தியாவில் ஆளும் பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.6,046.81 கோடியாக அதிகரித்து உள்ளது. ஓரே ஆண்டில் 21.17 சதவீதம் அதிகரித்துஉள்ளது.

இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கத்தின் (ஏடிஆர்) ஆய்வு அறிக்கை  தெரிவிப்பதாவது:

2020 - 21, 2021-22ம் ஆண்டுக்களுக்கான சொத்து மதிப்பு விவரங்களில்,
பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 8 தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு ரூ.7,297.62 கோடியிலிருந்து 2021-22ம் ஆண்டில் ரூ.8,829.16 கோடியாக உயர்ந்துள்ளது.

இதில், பாஜக தேசிய கட்சிகளில் மிக அதிக சொத்து மற்றும் கையிருப்பு நிதியை கொண்டுள்ள கட்சியாக உள்ளது. ரூ.4,990 கோடியிலிருந்து 2021-22ம் ஆண்டில் ரூ.6,046.81 கோடியாக அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் சொத்து மதிப்பு ரூ.691.11 கோடியிலிருந்து ரூ.805.68 கோடியாக அதிகரித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.732.79 கோடியிலிருந்து, 690.71 கோடியாக குறைந்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.182.001 கோடியிலிருந்து ரூ.458.10 கோடியாக அதிகரித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset