நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தூதராக சச்சின் டெண்டுல்கர்

புது டெல்லி:

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளார்.
இந்திய வாக்காளர்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்ச்சிகளில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சச்சின் டெண்டுல்கர் ஈடுபடுவார்.

இளைஞர்களிடையே சச்சின் டெண்டுல்கரின் இணையற்ற தாக்கத்தைப் பயன்படுத்தி, 2024 மக்களவைத் தேர்தல் உள்பட வரவிருக்கும் தேர்தல்களில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க பங்கை இந்த நடவடிக்கை அளிக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2019 மக்களவைத் தேர்தலின் போது, கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, நடிகர் அமீர் கான், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் போன்ற பிரபலங்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதர்களாக இருந்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset