நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சந்திரயான் படத்துக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு: பிரகாஷ் ராஜ் கூல் பதில்

பெங்களூரு: 

சந்திரயான் 3 விண்கலம் திட்டம் குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவிட்ட படத்துக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவின் நிலவு குறித்த ஆராய்ச்சில் முக்கிய மைல் கல் ஆக பார்க்கப்படும் சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து  நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்ட 4-ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பதிவில், "வாவ்... நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என கேப்ஷன் பதிவிட்டு இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே சிவன் டீ ஆற்றுவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

மோடியை விமர்சிக்கும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம் திட்டத்தை கேலி செய்து இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெட்டிசன்கள் பலரும் பிரகாஷ் ராஜின் கருத்தை சாடி வருகின்றனர். இந்தியாவின் கனவுதிட்டத்தை அரசியலுக்காக இப்படி விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் சாடியுள்ளனர்.

இதற்கு கூலாக பதிலளித்துள்ள பிரகாஷ் ராஜ்,  வெறுப்பு வெறுப்பை மட்டுமே பார்க்கிறது. நான் என் பதிவின் மூலம் ஆம்ஸ்ட்ராங் காலத்தின் நகைச்சுவையை குறிப்பிடுகிறேன்.

நமது கேரளா சாய்வாலாவை (தேநீர் கடைக்காரர்களை) கொண்டாடுகிறேன். உங்களுக்கு ஜோக் புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்னை. வளருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset