நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

 சந்திரயான்-3 விண்கலம் தங்க நிறத் தகடால் மூடப்பட்டிருப்பதற்கான காரணம் இதுதான்

புது டெல்லி :

சந்திரயான் -3 விண்ணில் ஏவப்பட்டது முதல், விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வம் அனைவரிடத்திலும் அதிகரித்திருந்தது. 

சந்திரயான் -3 குறித்த தகவல்கள்கள், விண்கலத்தின் பல புகைப்படங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பகிரப்பட்டு வர நிலையில் அந்த புகைப்படங்களில் விண்கலத்தை தங்க நிற மென் தகடுகள் சுற்றியிருப்பதை காண முடியும். 

சந்திரயான் -3 விண்கலம் மட்டுமல்ல, பிற விண்கலங்கள், செயற்கைகோள்கள், கருவிகளும் கூட மென் தகடுகளால் சுற்றப்பட்டிருக்கும். அது என்ன மென் தகடு, அது ஏன் விண்கலத்தைச் சுற்றி மூடப்பட்டுள்ளது என்ற கேள்வி பலருக்கும் எழுகின்றது. 

விண்கலத்தைச் சுற்றி பார்ப்பது தங்கம் போல் காட்சியளித்தாலும் அது தங்கம் அல்ல என்று நேரு கோளரங்கத்தின் இயக்குநர் அர்விந்த் பரஞ்சபே தெரிவித்துள்ளார். 

அதற்கு பெயர் MLI- Multi-Layer Insulation. அது  மென் தகடுகளால் ஆனது. அந்த மென் தகடுகள் பல அடுக்குகளில் ஒன்றின் மேல் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். 

தங்க நிற மென் தகடுகள் வெளியேயும், வெள்ளை அல்லது வெள்ளி நிற தகடுகள் உள்ளேயும் வைக்கப்படும் என்றும் அர்விந்த் விவரித்துள்ளார். 

இந்தத் தகடுகள் பார்ப்பதற்கு தங்கம் போல் இருந்தாலும், அவை தங்கத்தால் ஆனவையல்ல. அவை பாலிஸ்டர் தன்மை கொண்ட பொருட்களால் ஆனவை. இதன் மீது அலுமினியம் பூச்சு இருக்கும். இவை இரண்டும் சேர்த்து தான் மென் தகடுகள் உருவாக்கப்படுகின்றன.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset