நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹரியாணாவில் மீண்டும் பள்ளிவாசலுக்கு தீவைக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை தொழுகையை வீட்டில் தொழ உத்தரவு 

குருகிராம்: 

மதக் கலவரம் ஏற்பட்ட ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் ஒரு பள்ளிவாசலுக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை தொழுகையை வீட்டிலேயே தொழ முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நூ மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தின் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், அங்கு இரு சமூகத்தினரிடையே மதக் கலவரம் மூண்டது. 

ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டதோடு, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனர். இந்தக் கலவரம் அருகிலுள்ள குருகிராம் மாவட்டம் சோனா நகருக்கும் பரவியது.

இந்தக் கலவரத்தில் நூ மாவட்டத்தில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். சோனா நகரில் அஞ்சுமான் மசூதிக்குள் மர்ம கும்பல் நள்ளிரவில் புகுந்து நடத்திய தாக்குதலில், அங்கிருந்த துணை இமாம் சாத் (26) உயிரிழந்தார்பள்ளிவாசலுக்கும் மர்ம கும்பல் தீ வைத்தது.

Haryana Violence Live News Updates: Nuh SP Varun Singla transferred to  Bhiwani, IPS Narendra Bijarniya to take charge

இந்நிலையில் வியாழக்கிழமை விஜய் சௌக் பகுதியில் அமைந்துள்ள மசூதிக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் காவல் நிலையம் அருகிலுள்ள மற்றொரு மசூதியில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை, வியாழக்கிழமை இரவில் அடுத்தடுத்து  இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தன. தீ விபத்தில் இரண்டு மசூதிகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், யாருக்கும் பாதிப்பில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset