நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஞானவாபி மசூதி முழுவதையும் ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

வாரணாசி:

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த அனுமதி அளித்து அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் முறையிட்டுள்ளது.

ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள ஹிந்து கடவுள் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி தில்லியைச் சேர்ந்த 5 பெண்கள் வழக்குத் தொடுத்தனர்.

இதையடுத்து,மசூதியில் ஆய்வு நடத்திய தொல்லியல் துறையினர் சிவலிங்கம் உள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால், அது மசூதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் நடுவே உள்ள நீரூற்று சிலை என மசூதி நிர்வாகம் தெரிவித்தது. பல்வேறு மேல்முறையீடுகளைத் தொடர்ந்து, அந்தப் பகுதியை மூடி சீல் வைத்துப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மசூதியின் முழு பகுதியிலும் ஆய்வு நடத்த வேண்டும் என்று ஹிந்து அமைப்பினர் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்திருந்தனர். இதை ஏற்ற வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மசூதி குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், மசூதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை இடைக்கால தடை விதித்தது என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மசூதி குழு தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், மசூதியில் ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட நீதிமன்றம் முறையான உத்தரவையே பிறப்பித்துள்ளது. அதில் தலையிட எந்தவித அவசியமும் இல்லை. இந்த ஆய்வின்போது தோண்டும் பணிகள் எதையும் மசூதியில் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset