நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து: உச்சநீதிமன்றம் தொடங்கியது தினசரி விசாரணை

புது டெல்லி:

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தினசரி விசாரணயை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தொடங்கியது.

அப்போது நீதிபதிகள் மனுதாரர்களிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

1957-ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணையவதற்கான ஒப்பந்தம் இறுதியானது. அதில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து மக்களுக்கு உரிய உதவிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய பாஜக அரசு கடந்த 2019, ஆகஸ்ட் 5}ஆம் தேதி ரத்து செய்தது. இதற்காக நாடாளுமன்றத்தில் பரிந்துரை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.  

ஜம்மு காஷ்மீர் பேரவை 2018இல் கலைக்கப்பட்டிருந்தது. இதுவரை அங்கு பேரவைத் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு புதன்கிழமை தினசரி விசாரணையைத் தொடங்கியது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபில், "ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரையின் அடிப்படையிலேய குடியரசுத் தலைவர் அரசாணையை பிறப்பிக்க முடியும். நாடாளுமன்றத்தின் பரிந்துரையின்படி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லாது' என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370ஆவது பிரிவு தற்காலிகமானது எனஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபை 1957இல் முடிவடைந்தபிறகு சிறப்பு அந்தஸ்து எப்படி நிரந்தரமானது?

நிர்ணய சபையின் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு சிறப்பு அந்தஸ்துக்கு எதுவும் செய்யக் கூடாது என சட்டத்தில் எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா?

அரசியல் நிர்ணய சபையே இல்லாத போது சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய யார் பரிந்துரைப்பது?' என்று நீதிபதிகள் தொடர் கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு கபில் சிபல், "சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது அரசியலமைப்பு சட்டத்தின்படி நடைபெறவில்லை. ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபையின் பணியை நாடாளுமன்றமே கையில் எடுத்துக் கொண்டு, ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக கூறி அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது. இது சரியானதா?

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான், ஆனால், பெரிய மாநிலத்தைப் பிரித்து 2 சிறிய யூனியன் பிரதேசமாக மாற்றிய இந்திய வரலாற்றில் நடைபெறவில்லை.
ஜம்மு காஷ்மீர் அரசுடன் ஆலோசனை நடத்திதான் இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க முடியும்' என கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset