நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹரியாணாவி்ல் முஸ்லிம்களின் சொத்துகள் குறிவைத்து தாக்குதல்

புது டெல்லி:

ஹரியாணாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்தி பேரணியில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து, அங்குள்ள முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்தக் கலவரத்தில் மசூதி எரிக்கப்பட்டு, இமாம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் இனக் கலவர பரபரப்பை மடைமாற்ற ஹரியாணாவில் கலவரம் தூண்டப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தால் ஏற்பட்ட கலவரத்தில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

அண்டை மாவட்டமான குருகிராமில் மசூதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கிருந்த 26 வயது துணை இமாம் உயிரிழந்தார்.

Inside Delhi: beaten, lynched and burnt alive | India | The Guardian

அஞ்சுமான் மசூதிக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பின்னர் மசூதிக்கு அவர்கள் தீ வைத்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் குண்டு காயமடைந்த மசூதியின் துணை இமாம் பிகாரைச் சேர்ந்த 26 வயது சாத், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில், இந்தக் கலவரம் திடீரென நடைபெற்றதாகத் தெரியவில்லை. திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறை என்பது தெரிகிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்றார்.

வன்முறையைத் தொடர்ந்து இரு சமூகத்தினரிடைய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக நூ மாவட்டம் மற்றும் குருகிராமின் சோனா பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைதிக் குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset