நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெல்டா குடியேற்றவாசிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் அன்வார் பொய் சொல்கிறார்: மொஹைதின் யாசின் 

கோலாலம்பூர்:

பெல்டா  குடியேற்றவாசிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் பிரதமர் அனவார் பொய் சொல்கிறார் என்று தேசிய கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் குறை கூறினார்.

செர்டாங்கில் பெல்டா குடியேறியவர்கள் தினத்தை கொண்டாடும் நிகழ்வில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறுகையில், பெல்டா குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட 8.3 பில்லியன் வெள்ளி கடனை தள்ளுபடி செய்வதாக மொஹைதினின் நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் அந்த நடவடிக்கை ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். இது உண்மைக்கு புறம்பான பேச்சாகும்.

பெல்டா குடியிருப்பாளர்களின் கடனை நான் தீர்க்கவில்லை என்று அன்வார் குற்றம் சாட்டியுள்து கடைந்தெடுத்த ஒரு பெரிய பொய்.

பெல்டா குடியேற்றவாசிகளின் கடனைத் தீர்க்கும் தீர்மானம் நான் பிரதமராக இருந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதை பிரதமர் துறை அமைச்சர் பிப்ரவரி 23 அன்று நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் உறுதிப்படுத்தினார். 

இருப்பினும், பெல்டாவின் பணப்புழக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஒற்றுமை அரசாங்கத்தால் குடியேறியவர்களின் கடனைத் தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை.

பெல்டா குடியேறியவரின் 8.3 பில்லியன் ரிங்கிட் கடனில் ஒரு பகுதியை ரத்து செய்ய மொஹைதினின் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட முயற்சியை அரசாங்கம் நிறுத்துவதாக பிரதமர் துறை அமைச்சர் கூறினார்.

ஆனால், அன்வார் இப்போது வேறொரு கதையை சொல்கிறார் என்று டான்ஸ்ரீ மொஹைதின் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset