நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கர்நாடகத்தில் ரூ.2.7 லட்சம் தக்காளி திருட்டு

ஹாசன்:

இந்தியாவில் தக்காளியின் விலை உச்சத்தில் உள்ளநிலையில், விவசாய தோட்டத்தில் விளைந்திருந்த ரூ.2.7 லட்சம் மதிப்பிலான தக்காளி திருடப்பட்டதாக கர்நாடக போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனையாகிறது. ஹாசன் மாவட்டத்தின் பேலூரைச் சேர்ந்த பார்வதம்மா தனது தோட்டத்தில் 2 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்திருந்தார்.

புதன்கிழமை காலையில் தோட்டத்தில் உள்ள செடிகளிலிருந்து தக்காளிகள் திருடப்பட்டிருந்தன.

இது குறித்து செய்தியாளரிடம் அவர் கூறுகையில், எங்களுடைய கடின உழைப்பு வீணாகி உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 வரை தோட்டப் பணிகளில் ஈடுபடுவோம். தக்காளி தோட்டத்தை எனது குடும்பத்தினர் எச்சரிக்கையுடன் பாதுகாத்து வந்தபோதும் அவை திருடப்பட்டுள்ளன. இந்த நிலத்தில் நாங்கள் போட்ட உழைப்பும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்றார்.

தெலங்கானாவின் மெஹபூப்பாத் மாவட்டத்தில் கடையை உடைத்து, 20 கிலோ தக்காளி உள்பட 35 கிலோ காய்கறிகள் திருப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset