நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கடந்த மாதமே தேசியவாத காங்கிரஸ் தலைவராகிவிட்டேன்: அஜீத் பவார்

மும்பை:

தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், கடந்த மாதமே அக்கட்சியின் தலைவராகிவிட்டதாக தேர்தல் ஆணையத்தில் கட்சியில் பிளவை ஏற்படுத்திய அஜீத் பவார் தெரிவித்துள்ளார்.

83 வயதாகும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தனது மகள் சுப்ரியா சுலே, பிரஃபுல் பாட்டேலை செயல் தலைவராக கடந்த மாதம் ஆக்கினார்.

இதனால் பெரும் இன்னலுக்கு ஆளான சரத்பவாரின் அண்ணன் மகன் அஜீத் பவார் பாஜக துணையுடன் கட்சியை உடைத்தார். முன்பு தேர்தல் முடிந்தவுடன் பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராக பதவியேற்றுவிட்டு பின்னர் ஆட்சியை கவிழ்த்துவிட்டு மீண்டும் தேசியவாத காங்கிரஸுக்கு வந்து எதிர்க்கட்சித் தலைவரானார் அஜீத் பவார்.

தற்போது மீண்டும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வர் பதவி ஏற்றுள்ளார். புதன்கிழமை அவர் கூட்டிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 32 பேர் பங்கேற்றதாகவும், சரத் பவார் கூட்டிய கூட்டத்தில் 18 பேர் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர், சின்னம் கோரி அஜீத் பவார் அளித்துள்ள கடிதத்தில் கடந்த மே 30-ஆம் தேதியே கட்சியின் தலைவர் பதவி ஏற்றுவிட்டதாகவும், 40 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடித்தத்தையும் அவர் இணைத்துள்ளார்.
ஆனால் ஜூன் 2-ம் தேதிதான் அஜீத் பவார் கட்சியை உடைத்து துணை முதல்வர் பதவியை ஏற்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset