நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமையில் UKM மாணவர்களின் இலக்கியப் பயணத்தின் வெள்ளி விழா

கோலாலம்பூர்:

மலேசிய தேசியப் பல்கலைக்கழகம், UKM மாணவர்களின் 'இலக்கியப் பயணத்தின் வெள்ளி விழாவில்' கலந்து கொண்டு தலைமையுரையாற்றினார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம இ கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன். 

25ஆவது ஆண்டாக UKM இந்திய மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீடு, திருவள்ளுவரை மையமாகக் கொண்டு "வள்ளுவம் வழியே" எனும் தலைப்பில் நடைபெற்றது. 

வள்ளுவரின் வழி ஒவ்வொருவரும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் வாழ்வு சிறக்கும். 

May be an image of 6 people, dais and text

May be an image of 5 people, dais and text

புத்தகம் என்பது ஒரு சமூகத்தின் வேர். ஒரு நல்ல புத்தகம் நல்ல கனவை உண்டாக்கும்.

நல்ல கனவு நல்ல சிந்தனையைத் தூண்டும். நல்ல சிந்தனை நல்ல செயல்களை உருவாக்கும்.

நல்ல செயல்களினால் நல்ல தலைமுறை உருவாகும்.

ஒரு நல்ல தலைமுறை சிறந்த தலைவனை உருவாக்கும்.

நல்ல தலைவன் ஒரு சமூகத்தின் வரலாற்றையே மாற்ற முடியும்.

ஆக எழுத்தின் வலிமையை உணர்வோம் என்று உரையாற்றிய டத்தோஸ்ரீ எம் சரவணன் UKM மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொள்வதாக கூறினார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset