நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கேகே நிர்வாக தலைவர் டத்தோஸ்ரீ சாய் அறிவிப்பு

புத்ரா ஜெயா: 

உள்ளூர் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதை கேகே சூப்பர் மார்கெட் இலக்கு கொண்டிருப்பதாக அதன் தோற்றுநர் மற்றும் தலைமை நிர்வாக தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள கே.கே சூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை செய்ய 80 விழுக்காடு மலேசியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

20 விழுக்காடு மட்டுமே அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

மலேசிய தொழிலாளர்களுக்கு அதிக அளவில் தொழில் திறன் பயிற்சிகளை வழங்க நாங்கள் முன் வந்திருக்கிறோம்.

ஆகவே கே.கே. சூப்பர் மார்க்கெட்டுகளில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை மலேசியர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

மனிதவள அமைச்சர் வி. சிவக்குமாரை இன்று மரியாதை நிமித்தமாக டத்தோஸ்ரீ டாக்டர் கேகே சாய், கேகே சூப்பர் மார்க்கெட் வர்த்தக தலைமை நிர்வாகி ஸ்டீவன் லீ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகமான உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த மனிதவள அமைச்சு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கேகே சூப்பர் மார்க்கெட் நிறுவனம் துணை நிற்கும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset