
செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்சி அருகே சென்னை ரயிலைக் கவிழ்க்க சதி
திருச்சி:
திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயரை வைத்து சென்னை ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வழக்கம் போல சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
சமயபுரம் அருகே உள்ள வாளாடி ரெயில் நிலையத்தை கடந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மேளவாளாடி பகுதியில் வந்துகொண்டிருந்தது.
அப்போது, தண்டவாளத்தின் நடுவில் கருப்பு நிறத்தில் தடுப்பு போன்று பொருட்கள் இருந்ததை என்ஜின் டிரைவர் கவனித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ரயிலை நிறுத்த முயன்றார்.
ஆனால் அதற்குள் அந்த கருப்பு பொருளின் அருகே ரெயில் வந்துவிட்டது.
அப்போது தான், தண்டவாளத்தில் லாரி டயர் போடப்பட்டு, அதன் மீது மற்றொரு டயரை நிற்க வைத்து இருப்பது தெரியவந்தது.
டிரைவர் பிரேக் பிடித்தாலும், ரயில் என்ஜின் அவற்றின் மீது மோதி சிறிது தூரத்தில் சென்று நின்றது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm
அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
June 30, 2025, 7:11 pm