நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில்  மு.க. ஸ்டாலின் - அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திப்பு 

சென்னை: 

சென்னையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினும்  டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சந்திக்கவுள்ளனர். பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகத்திற்கு வருகை மேற்கொண்டு ஆதரவை கோருகிறார். 

பாஜக - ஆம் ஆத்மி கட்சிக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு காரணமாக சில உரசல்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் பாஜகவை எதிர்க்க அனைத்து மாநில அரசுகளின் ஆதரவு தேவைப்படுகிறது என்று இதற்கு முன் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். 

முக ஸ்டாலினை இன்று சந்திக்கவுள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவால் சண்டிகாரில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று மாலை 4 மணிக்கு சென்னை வந்தடைகிறார். அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில்  முக ஸ்டாலினைச் சந்திப்பார் என்று தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset