நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஐ. நா.வின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா உளவு ஏவுகணை செலுத்த முயற்சி

சியோல்: 

ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி உளவு செயற்கைக் கோளை வட கொரியா விண்ணில் செலுத்தவுள்ளது.

இது குறித்து அந்த நாடு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், வரும் ஜூன் மாதத்தில் உளவு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும்.

அதன் பிறகு, அமெரிக்காவும், தென் கொரியாவும் அவ்வப்போது நடத்தி வரும் கண்மூடித்தனமான கூட்டு ராணுவப் பயிற்சிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 31ஆம் தேதியிலிருந்து ஜூன் 11ஆம் தேதிக்குள் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதனால் மஞ்சள் கடல், கிழக்கு சீனக் கடலில் ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஜப்பான் கடலோரக் காவல் படைக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset