நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சாதாரண குடிமகன் உட்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பிய சீனா 

பெய்ஜிங்: 

ரஷியா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும்.

இதற்காக விண்வெளி துறையில் சீனா கோடிக்கணக்கில் முதலீடு செய்து உள்ளது.அந்தவகையில் 400 கி.மீ. உயரத்தில் உள்ள தனது விண்வெளி நிலையமான தியான்ஹேவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா முடிவு செய்தது.

அதன்படி சீனாவின் ஜியுகுவான் செயற்கை கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை ஷென்சோ-16 என்ற செயற்கை கோள் அனுப்பப்பட்டது.

இது சீனாவின் 4-வது மனித விண்வெளி பயணம் ஆகும். ஆனால் இந்த முறை முதன் முதலாக ஒரு சாதாரண குடிமகன் உள்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

அதில் உள்ள 3 பேரும் நல்ல நிலையில் உள்ளதாகவும் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 3 பேரும் 5 மாதங்கள் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வு பணி மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset