நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஐ.நா.வின் தடையை மீறி இராணுவ உளவு செயற்கைகோள்களை அனுப்பும் வடகொரியா

பியாங்யாங் :

கொரியத் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் கடந்தாண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இது தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் கடற்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.

இந்நிலையில் ஜப்பான் அரசாங்கத்துக்கு வடகொரியா நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் இராணுவ உளவு முயற்சியின் ஒரு பகுதியாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனுப்பவுள்ளதாக வடகொரியா அரசாங்கம் கூறியுள்ளது. 

ஐ.நா.வின் தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தங்களது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தல் என ஜப்பான் தெரிவித்துள்ளது. எனவே தங்களது நாட்டின் எல்லைக்குள் இந்தச் செயற்கைகோள் நுழைந்தால் அதனைச் சுட்டு வீழ்த்துமாறு ஜப்பான் பாதுகாப்புசமைச்சர் யசுகாசு இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset