நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கத்திரி வெயில் தமிழகத்தில் நாளையுடன் நிறைவடைகிறது: பள்ளிகள் ஜூன் 7 ஆம் தேதி திறக்க உத்தரவு

சென்னை: 

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் நாளையுடன் (மே 29) நிறைவடைகிறது. நேற்றைய நிலவரப்படி 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டு கோடைக் காலத்தில் மே 4-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை கத்திரி வெயில் நிலவும். இந்திய வானிலை ஆய்வு மையத்தில் கத்திரி வெயில் தொடர்பாக தரவுகள் ஏதும் இல்லாவிட்டாலும், இந்த காலகட்டத்தில் வெப்பம் அதிகமாக வாட்டுவது வழக்கம். சில ஆண்டுகளில் கத்திரி வெயிலே தெரியாத வகையிலும் இருந்துள்ளது.

ஆனால் இந்த ஆண்டு கடந்த மே 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் உள் மாவட்டங்கள் மட்டுமல்லாது கடலோர மாவட்டங்களிலும் கடும் வெயில் சுட்டெரித்தது.

இந்நிலையில் ஒருவழியாக இந்த ஆண்டு கத்திரி வெயில் நாளையுடன் நிறைவடைகிறது. இது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. 

இருப்பினும் மேலும் சில தினங்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என்பதால், பள்ளி திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset