
செய்திகள் தமிழ் தொடர்புகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தோக்கியோ:
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்குள்ள ஒசாகா மாநிலத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர் பேக் இன்ஃப்லேட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை 83 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் இயக்குனர் கென் பாண்டோவும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஷ்ணுவும் கையெழுத்திட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 8:36 am
கொடைக்கானலில் கோடைவிழா: மலர்க் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறது பிரையன்ட் பூங்கா
May 3, 2025, 7:24 pm
தமிழகம் முழுவதும் மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு
May 1, 2025, 7:39 pm