
செய்திகள் மலேசியா
21 கிலோ போதைப்பொருள் விநியோகம்: மரணத் தண்டனையை எதிர்நோக்கும் 2 இந்திய ஆடவர்கள்
ஈப்போ:
21 கிலோகிராம் எடை ஹெராயின் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஆர்.ஆர்.பிரபாகரன் (39) எஸ்.ஜெனேசன் ஆகிய இருவரும், மாஜிஸ்திரேட் ஜெசிகா டெய்மிஸ் முன் மொழிபெயர்ப்பாளரால் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மே 16 -ஆம் தேதி , இரவு 9 மணிக்கு ஈப்போ, ஜாலான் ஜெலாப்பாங் பாயு 6, புன்சாக் ஜெலாப்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் 21,069 கிராம் எடையுள்ள ஹெராயின் வகை போதைப் பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்கள் இருவர் மீதும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B (1) (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் 39B (2) இன் கீழ் தண்டிக்கப்படலாம்.
இந்தக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் ஆயுள் தண்டனையுடன் குறைந்தது 15 கசையடிகள் வழங்கப்படும்.
அரசு தரப்பு வழக்கறிஞரான ஷாஹிரா அஜாஹார் இந்த வழக்கை கையாண்டார். மேலும் கணேசன் தரப்பில் வழக்கறிஞர் டாயாங் நோர் எமிலியா அஸ்மான் ஷா ஆஜரானார்.
வேதியியல் துறையின் அறிக்கைக்காகக் காத்திருப்பதால் இந்த வழக்கு ஜூலை 26ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.
முன்னதாக, மே 18-ஆம் தேதி போதைப்பொருள் பதப்படுத்தும் ஆய்வகமாகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மாடி வீட்டில் பேராக் காவல் படைத் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை நடத்தியச் சோதனையில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
இரவு 9 மணியளவில் நடந்த சோதனையில், பிரபாகரனும் அவரது 38 வயது மனைவியும் வைத்திருந்த 210,122.80 ரிங்கிட் மதிப்பிலான 21,676 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm
வங்காளதேச போராளிக் குழு அழிக்கப்பட்டது; மற்ற கூறுகள் இன்னும் கண்டறியப்படவில்லை: போலிஸ்
July 5, 2025, 12:09 pm
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்துவார்
July 5, 2025, 12:08 pm