நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீ குவான் யூவுக்கு தமிழகத்தில் சிலை: மு. க. ஸ்டாலின்

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் வந்திருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு இங்குள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்தின.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் சிங்கப்பூருக்கு மேற்கொண்டிருக்கும் முதல் அதிகாரத்துவப் பயணம் இது.

இந்த நிகழ்ச்சியை 60 தமிழ் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஏற்பாடு செய்துள்ளன.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சமய நல்லிணக்கம், பல் இன ஒற்றுமை, மொழிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குச் சிங்கப்பூர் எடுத்துக்காட்டாக விளங்குவதைச் சுட்டிக் காட்டினார்.