
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்ட கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை:
தமிழக அரசு சார்பில் கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது படத்துக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலை தமிழக அரசு சார்பில் நேற்று மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு அடியில் அவரது உருவ படத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கண்ணதாசனின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், "மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்ட கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்! காலத்தால் வெல்ல முடியாத மாமேதைகள் தங்கள் கலை படைப்புகளால் உலகம் உள்ளவரை நம் உள்ளத்தில் நிலைத்து நிற்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 5:53 pm
தூத்துக்குடியில் மிதவை கப்பலின் டேங்கை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
September 17, 2025, 4:04 pm
பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm