
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையின் கூண்டில் சிக்கியது
வால்பாறை:
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில் குடியிருப்புக்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த ரோஷினிகுமாரி (6) என்ற சிறுமியை சிறுத்தை தாக்கி கவ்விச் சென்றது.
சிறுமியின் உடல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டு, உடற்கூறாய்வுக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வனத் துறை சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிலையில், சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.
வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 5:53 pm
தூத்துக்குடியில் மிதவை கப்பலின் டேங்கை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
September 17, 2025, 4:04 pm
பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm