
செய்திகள் தமிழ் தொடர்புகள்
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
சென்னை:
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மேற்கு வங்கம். வங்கதேச கடற்கரைப் பகுதிகளில் உருவானது. தென்மேற்கு வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் நோக்கி அடுத்த 2 நாட்களில் நகரக்கூடும்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
மேலும், கேரள மாநிலத்தில் இன்று ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செ.மீ. வரையிலான கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் 2 நாள்களுக்கு மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல், மத்திய அரபிக்கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:11 pm
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் சுருக்கமான பார்வை
June 29, 2025, 11:12 am
பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல; ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவேன்: சீமான்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm
புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு: பாஜக அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா
June 28, 2025, 12:44 pm
மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவு
June 27, 2025, 11:01 am
அண்ணா பெயரையே அடமானம் வைத்துவிட்டது அதிமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்
June 26, 2025, 10:17 pm
சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையின் கூண்டில் சிக்கியது
June 24, 2025, 6:02 pm