
செய்திகள் தமிழ் தொடர்புகள்
புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு: பாஜக அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா
புதுவை:
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்கள் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை தேஜ கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ்- பாஜ இணைந்து சந்தித்தது. இதில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது.
முதல்வராக ரங்கசாமியும், என்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும், துணை சபாநாயகர் பதவியும் கொடுக்கப்பட்டது. அதேபோல் பாஜவில் 2 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜ கட்சியை சேர்ந்த ராமலிங்கம், அசோக் பாபு மற்றும் வெங்கடேசன் ஆகிய மூவருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் நியமன எம்எல்ஏக்களாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தற்போது பாஜ நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகிய 3 பேரும் சபாநாயகர் செல்வத்தை சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை 3 பேரும் சட்டசபை செயலர் தயாளனிடம், சபாநாயகர் செல்வம் முன்னிலையில் வழங்கினர்.
முன்னதாக நேற்று காலை புதுச்சேரி வந்த பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவிடம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்பி மற்றும் பாஜ நிர்வாகிகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், கட்சி மாநில தலைவர் செல்வகணபதி எம்பி ஆகியோர் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதன் பிறகே சபாநாயகர் செல்வம் அறையில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 5:53 pm
தூத்துக்குடியில் மிதவை கப்பலின் டேங்கை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
September 17, 2025, 4:04 pm
பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm