நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பயன்பாட்டில் இல்லா டிவிட்டர் கணக்குகள் நீக்கப்படும்: எலான் மஸ்க்

வாஷிங்டன் :

உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபர் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல மாற்றங்களைச் செய்து வருகின்றார். 

இதில் ஆட்குறைப்பு, 'புளூ டிக்' வசதிக்கு கட்டணம் போன்ற முடிவுகள் உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியப் போதும் எலான் மஸ்க் அதனைப் பொருட்படுத்தவில்லை. 

முன்னதாக, டிவிட்டர் 'லோகோ'வான, நீலநிற குருவியை மாற்றி, ஜப்பானின் முக்கிய நாய் இனமான 'ஷிபு'என்ற நாயின் புகைப்படத்தைப் புதிய 'லோகோ'வாக வைத்தார். பின்னர் அந்த லோகோ மாற்றப்பட்டு, மீண்டும் நீலநிற குருவியே வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், நீண்ட காலம் பயன்பாட்டில் இல்லாத டிவீட்டர் கணக்குகள் நீக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து ட்வீட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset