நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சூடான் தாக்குதலில் 190 குழந்தைகள் மரணம்; 1,700 பேர் காயம்: யுனிசெப் அறிவிப்பு

நியூயார்க்:

சூடானில் நடந்த உள்நாட்டுப் போரினால் இதுவரை  190 குழந்தைகள் கொல்லப்பட்ட நிலையில் 1,700 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் அனைத்துலக சிறார்களுக்கான அவசர உதவி நிறுவனமான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே தாக்குதல் நடந்தது. 

சுமார் மூன்று வாரங்களாக நடைபெற்றுவரும் வன்முறைகளுக்கு மத்தியில் குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது பல குடும்பங்கள் இப்போது சூடானிலும் அதன் எல்லைகளுக்கு அப்பாலும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்கின்றனர்.

மனிதாபிமான ஊழியர்களும் இப்போரில் தாக்கப்பட்டனர். அதே நேரத்தில் மனிதாபிமான வசதிகள், தொண்டூழியர்களின் வாகனங்கள், பொருட்கள், முதலுதவி வாகனங்கள், அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

அறிக்கையின்படி, மனிதாபிமானப் பணிகள் தரையில் பாதுகாப்பாகச் செயல்படுவதை உறுதி செய்வதன் மூலம் சூடானில் போரிடும் தரப்பினருக்கு சர்வதேச சட்டத்திற்கு இணங்குமாறு அந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

சமீபத்திய சண்டையில் குறைந்தது 550 பேர் கொல்லப்பட்ட நிலையில் 5000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset