நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவில் Arcturus கிருமித்தொற்று பரவி வருகிறது

ஜக்கார்த்தா:

இந்தோனேசியாவில் புதிய COVID-19 ரகக் கிருமி வரும் நாள்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஜக்கார்த்தா சுகாதார அமைப்பு  எச்சரிக்கையை விடுத்துள்ளது,

Arcturus எனும் அந்தப் புதிய வகை COVID-19 கிருமி ஜக்கார்த்தாவில் பரவுகிறது.

மார்ச் 23ஆம் தேதி அது முதலில் அடையாளம் காணப்பட்டது.

Omicron துணைக் கிருமியான அது ஜக்கார்த்தாவில் பத்துப் பேருக்குப் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பிறகு இந்தோனேசியாவில் COVID-19 வேகமாகப் பரவிவருகிறது.

தினமும் 1,000 பேருக்கு மேல் பாதிக்கப்படுகின்றனர்.

2020 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை அங்கு 6.7 மில்லியன் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாவதாய் ஜக்கார்த்தா சுகாதார நிறுவன அதிகாரி கூறினார்.

நாள்தோறும் புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்படுவோர் எண்ணிக்கை அடுத்த வாரம் 4,000ஐத் தாண்டலாம் என்றார் அவர்.

ஆதாரம்: ஜகர்த்தா போஸ்ட் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset