நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு; சிங்கப்பூர் தமிழர் தங்கராஜ் சுப்பையா தூக்கிலிடப்பட்டார்

சிங்கப்பூர்: 

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் சுப்பையா (வயது 46) சாங்கி சிறையில் இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டார். 

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமலில் இருக்கின்றன. 

உலக நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அந்த நாடு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. 

கொரானாவுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்ற ஆரம்பித்ததால், பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் கஞ்சா கடத்தியதாக சிங்கப்பூர் தமிழரான தங்கராஜ் என்பவருக்கு  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

2018ஆம் ஆண்டில், 1 கிலோ கிராம் (2.2 பவுண்டுகள்) கஞ்சாவைக் கடத்த சதி செய்ததாக உயர் நீதிமன்றத்தால், தங்கராஜ் சுப்பையா குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு அவருக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதன் முறையாகும். இவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

இவரின் உறவினர்கள் சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். 

தற்போது அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset