நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

2024ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன் :ஜோ பைடன் அறிவிப்பு 

வாஷிங்டன்: 

2024ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில்  நடப்பு அதிபர் ஜோ பைடன் போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரச்சார பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய நிலையில் நடப்பு அதிபர் ஜோ பைடன் இவ்வாறு அறிவித்துள்ளார். 

நாட்டின் ஜனநாயகத்தை வலுப்பெற செய்யவும் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் தாம் மீண்டும் போட்டியிடவுள்ளதாக கூட்டத்தின் நடுவே அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். 

இந்நிலையில் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி ஆகும். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அதிபராக இருந்த போது ஜோ பைடன் துணை அதிபராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset