
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஆஸ்கர் விருது வென்ற ஆவண படத்தின் பொம்மன் - பெள்ளி தம்பதியை முக ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து
சென்னை:
ஆஸ்கர் விருது வென்ற ஆவண படத்தின் பொம்மன் - பெள்ளி தம்பதியை நேரில் அழைத்து பாராட்டினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அவர்கள் இருவரையும் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
2019-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகள் ரகு, பொம்மி குட்டி யானைகள் மற்றும் அதை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை மையமாக வைத்து 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படத்தை ஊட்டியை சேர்ந்த இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் எடுத்தார்.
நேற்று முன்தினம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில் தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 8:36 am
கொடைக்கானலில் கோடைவிழா: மலர்க் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறது பிரையன்ட் பூங்கா
May 3, 2025, 7:24 pm