நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தாருங்கள்; மோடியிடம் அனைத்துக் கட்சியினர் வலியுறுத்து; நொறுங்கிப் போன உள்ளங்களுக்கு நம்பிக்கையைத் தாருங்கள்: உமர் அப்துல்லா

புது டெல்லி:

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அம் மாநில மக்களுக்கு மத்திய அரசின் மீதிருந்த நம்பிக்கை உடைக்கப்பட்டது. இப்போது அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் இன்னும் சில விவகாரங்கள் தொடர்பாகவும் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் என ஆறு கட்சிகள் உள்ளடக்கிய குப்கர் கூட்டணித் தலைவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, "2019 ஆகஸ்ட் 5இல் காஷ்மீரைத் துண்டாடிய விஷயத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இன்றளவும் நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 

அதற்காக நாங்களே சட்டத்தை கையிலெடுக்கும் செயலை ஒருபோதும் செய்யமாட்டோம். இதை நாங்கள் நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம்.

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அம் மாநில மக்களுக்கு மத்திய அரசின் மீதிருந்த நம்பிக்கை உடைக்கப்பட்டது. எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டது. இப்போது அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

காஷ்மீரின் நலனுக்கு ஒவ்வாத முடிவுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றே ஆக வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்டதில் எங்கள் மக்களுக்கு எள்ளளவும் உடன்பாடு இல்லை. மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்குவதே மக்களுக்கு உகந்த முடிவாக இருக்கும்" என்றார்.

முன்னதாக கூட்டத்தில் உரையாற்றிய ஒன்றியப் பிரதமர் மோடியும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதை மத்திய அரசு சிறப்பு கவனத்தில் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset