நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

2 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர் சித்திக் காப்பான் விடுதலை

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் நடைபெற்ற தலித் பாலியல் கொலை வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதற்காக கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பான் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை விடுதலையானார்.

அவர் மீது பயங்கரவாதிகள் மீது போடப்படும் 'உபா' மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு போடப்படட்டது.

2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் எனும் பகுதியில் 19 வயது தலித் இளம் பெண் ஒருவர் மாற்று சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என இளம்பெண்ணின் உறவினர்கள் மறுத்த நிலையில், காவல்துறையினரே இரவோடு இரவாக உடலை தகணம் செய்தனர். இது தொடர்பான செய்தியை சேகரிக்க சென்ற சித்திக் காப்பனை உ.பி காவல்துறையினர் கைது செய்தனர்.

அவருடன் 3 பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவரது ஜாமீன் மனுவை லக்னோ உயர்நீதிமன்றம் பலமுறை நிராகரித்தது.

பேட்டி எடுக்க சென்றது எப்படி குற்றமாகும்? எனக் கூறி உச்சநீதிமன்றம் சித்திக் காப்பானுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  ஜாமீன் வழங்கியது.

சிறையில் இருக்கும்போதே சித்திக் காப்பானுக்கு எதிராக சட்ட விரோத பணவரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

இதனால் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் அவரால் வெளியே வர முடியவில்லை.

இந்நிலையில், லக்னோ உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை வழக்கிலிருந்தும் ஜாமீன் வழங்கியதையடுத்து சிறையிலிருந்து சித்திக் காப்பான் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset