
செய்திகள் தமிழ் தொடர்புகள்
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை: தட்டிக்கேட்ட தந்தை மீது வீடு புகுந்து தாக்குதல்
வேலூர்:
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லையை தட்டிக்கேட்ட தந்தை மீது வீடு புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய உள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு சந்தோஷ் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினர் சந்தோஷை தாக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், தனது ஆதரவாளர்களுடன் சென்று, வீடு புகுந்து மாணவியின் குடும்பத்தினரை தாக்கினார். இதில் படுகாயமடைந்த மாணவியின் குடும்பத்தினர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில், தாக்குதல் நடத்திய இளைஞர்களை கைது செய்யக்கோரி, மாணவியின் பெற்றோர், அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது, உறவினர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை குடியாத்தம் சிறையில், தலைமைக் காவலராக பணியாற்றி வரும் நிலையில், போலீசார் குடும்பத்திற்கே பாதிப்பு ஏற்படும் போது போலீசார் வேடிக்கை பார்ப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 11:00 pm
புயல் எச்சரிக்கை: சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை
December 3, 2023, 7:16 pm
மிக்ஜாம் புயல் | மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம்: தமிழக அரசு எச்சரிக்கை
December 2, 2023, 10:26 pm
புயல் எச்சரிக்கை காரணமாக நாளை முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை 144 ரயில்கள் ரத்து
December 2, 2023, 5:13 pm
இந்தியாவிலேயே அதிக நன்கொடை; அதானியை விட 6 மடங்கு அதிகம் - வள்ளல் சிவ நாடார்
December 2, 2023, 2:37 pm
தமிழக ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
December 1, 2023, 9:50 pm
லஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி; தொடைப் புண் நடையில் காட்டுகிறது: ஜவாஹிருல்லா
November 30, 2023, 8:06 am
சென்னையில் கொட்டும் கனமழை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
November 28, 2023, 6:58 pm