நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நான் நலமாக உள்ளேன்: நடிகர் விஜய் ஆண்டனி டுவிட்

சென்னை:

மலேசியாவில் நடந்த பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது விபத்துக்குள்ளான நடிகர் விஜய் ஆண்டனி அறுவை சிகிச்சைக்குப் பிறகு  தாம் நலமாக இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளார்.

மேலும், எனக்காக பிரார்த்தனைகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி என்று என்றும் அவர் தெரிவித்தார். 

மலேசியாவின் லங்காவி தீவில் நிகழ்ந்த விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி படுகாயமடைந்த வேளையில் அவருக்கு தாடை, மூக்கில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

பிச்சைக்காரன் திரைப்படத்தின் முதலாம் பாகம் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது நடிகர் விஜய் ஆண்டனிக்கு படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

- செய்திப்பிரிவு

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset