நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெர்சிங் மாவட்டம் புதிதாக வெள்ளத்தால் பாதிப்பு

ஜொகூர் பாரு:

ஜொகூர் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளப்பேரிடர் ஏற்பட்டுள்ளது. தற்போது புதிதாக மெர்சிங் மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு பெய்த கனமழையால் மெர்சிங் மாவட்டத்தில் 2912 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில்,  புதிதாக 14 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக ஜொகூரில் 30 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாக செயற்குழு தெரிவித்தது. 

மெர்சிங் மாவட்டத்தை தொடர்ந்து சிகாமாட், குளுவாங் மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset