
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்: முதல்வர் ஸ்டாலின், வைகோ, கமல் உடன் சந்தித்து ஆதரவு கோரினார்
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், மநீம தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோரினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகனான சஞ்சய் சம்பத் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், திமுக கூட்டணி தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சந்தித்து வாழ்த்துபெற்றார். இடைத்தேர்தலில் திமுகவின் ஆதரவையும் கோரினார். பிரச்சாரத்துக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.
அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி,டி.ஆர்.பாலு எம்.பி., சட்டப்பேரவைகாங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எம்.கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, மாநில துணைத்தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனையும் இளங்கோவன் நேற்று சந்தித்துஆதரவு கோரினார். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஆலோசித்த பிறகு, கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார்.
அப்போது, விஜய்வசந்த் எம்.பி., அசன் மவுலானா எம்எல்ஏ, காங்கிரஸ் மாநில துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் எஸ்.காண்டீபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ‘‘கமலையும், காங்கிரஸையும் பிரிக்க முடியாது. அவர் நிச்சயம் ஆதரவு தருவார், பிரச்சாரத்துக்கு வருவார் என்றும் நம்புகிறேன். அதிமுக 4 ஆகபிரிந்திருக்கிறது. அவர்கள் பாஜகவை போட்டியிட வைப்பார்கள். முதல்வர் ஸ்டாலினின் சாதனை ஆட்சி எனக்கு வெற்றியை பெற்றுத் தரும்’’ என்றார்.
‘‘கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். மநீம வேட்பாளர் 10,005 வாக்குகள் பெற்று 4-ம் இடம் பிடித்தார்.
இடைத்தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால், தனது வெற்றியை உறுதி செய்யும் விதமாகவே கமல்ஹாசனிடம் இளங்கோவன் ஆதரவு கோரியுள்ளார்’’ என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 2, 2023, 10:41 am
தமிழகத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு
February 2, 2023, 10:30 am
தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
February 1, 2023, 1:13 pm
துபாயில் திருக்குறள் ஒப்புவித்தல் திருவிழா: உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு
January 31, 2023, 6:20 pm
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை: தட்டிக்கேட்ட தந்தை மீது வீடு புகுந்து தாக்குதல்
January 30, 2023, 1:50 pm
தமிழ்நாட்டின் அரசியல் களம் பாமகவிற்கு சாதகமாக உள்ளது: அன்புமணி ராமதாஸ்
January 29, 2023, 8:28 am
கமலின் மக்கள் நீதி மய்யத்தின் இணையதளம் ‘ஹேக்’ செய்யப்பட்டது: காவல்துறையில் புகார்
January 28, 2023, 9:49 pm