நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிக் பாஸ் 6 முடிந்தது; ரசிகர்களின் மோதல் முடியவில்லை: அஸீம் வெற்றியாளரானார் 

சென்னை:

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டி நேற்று இரவுடன் நிறைவடைந்த நிலையில், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தொடர்ந்து மோதிக் கொண்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஸீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6-ஆவது முறையாக தொகுத்து வழங்கினார்.

100 நாள்களை கடந்து இறுதி வாரத்தில் அஸீம், விக்ரமன், சிவின், மைனா, அமுதவாணன், கதிரவன் உள்ளிட்ட 6 பேரும் இறுதி வாரத்திற்குள் நுழைந்தனர். கதிரவனும் அமுதவாணனும் பணப்பெட்டியுடன் போட்டியிலிருந்து வெளியேறினர். வாரத்தின் நடுவில் மைனா வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. முதல்முறையாக முதல் மூன்று போட்டியாளர்களுமே இறுதி மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதில், அஸீம் முதலிடமும், விக்ரமன் இரண்டாமிடமும், சிவின் மூன்றாமிடமும் பெற்றனர்.

Bigg Boss Tamil 6 winner: Azeem lifts the trophy; wins a prize money of Rs  50 lakh​ | ​Bigg Boss Tamil Season 6 Winner

இந்நிலையில், இறுதிப் போட்டி நிறைவடைந்த 12 மணிநேரத்தை கடந்தும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அஸீம், விக்ரமன் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சீசன் தொடங்கியது முதலே அஸீம், விக்ரமன், சிவின் ஆகியோருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் டிவிட்டரில் பதிவிட்டும், ஹேஷ் டேக்குகளை டிரெண்ட் செய்தும் வந்தனர்.

அஸீம் ஆதரவாளர்கள் விக்ரமனை தாக்கியும், விக்ரமன் ஆதரவாளர்கள் அஸீமுக்கு எதிராகவும் டிவிட்டரில் நாள்தோறும் பதிவிட்டு வந்தனர்.

இந்த சீசனில் அஸீம் பலமுறை கோபத்தில் சக போட்டியாளர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து பேசியதற்கு கமல் 
 கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே முதல்முறையாக மக்கள் சார்பாக இந்த சீசனில் கலந்து கொண்ட மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிவினுக்கு இறுதிகட்டத்தில் ஆதரவு அதிகரித்திருந்தது.

கடந்த 10 நாள்களாகவே டிவிட்டரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் டிரெண்டிங்கில் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று அஸீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பிறகும், விக்ரமன் மற்றும் சிவினுக்கு ஆதரவாக பல்வேறு ட்வீட்கள் பதிவிடப்பட்டு வருகின்றது.

இத்தனை மோதல்களுக்கும் காரணம், கடந்த சீசன்களில் இல்லாத அளவிற்கு வெற்றியாளர் யார் என்று கணிக்க முடியாததே.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset