
செய்திகள் இந்தியா
இந்தியாவை அடுத்த 2 மாதங்களில் கரோனா 3ஆம் அலை தாக்கக் கூடும்: எய்ம்ஸ் இயக்குநர் கடும் எச்சரிக்கை
புது டெல்லி:
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இந்தியாவை 6 முதல் 8 வாரங்களில் தாக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். மேலும், ஏற்கெனவே நாம் எதிர்கொண்ட இரண்டு அலைகளை விட மூன்றாம் அலை மிக தீவிரமானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை எட்டிய வைரஸ் பரவல், தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால், 4 லட்சத்துக் கும் அதிகமாக பதிவாகி வந்த தினசரி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, இப் போது 60 ஆயிரமாக குறைந்துள்ளது. அதேபோல, கரோனா பாதிப்பால் உயி ரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைய தொடங்கி இருக்கிறது.
இருந்தபோதிலும், கரோனா வைரஸின் மூன்றாம் அலை இந்தியாவை விரைவில் தாக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். எனவே, அதனை எதிர் கொள்ளும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா நேற்று பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:
கொரோனா இரண்டாம் அலையின் தீவி ரம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக, நாட்டில் பெரும் பாலான மாநிலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளில் பெரிய அளவில் தளர்வுகள் வழங்கப்படுவதை பார்க்க முடிகிறது. தளர்வுகள் அதிகரிக்க அதி கரிக்க, மக்கள் மத்தியில் வைரஸ் தொடர் பான விழிப்புணர்வு பல மடங்கு குறைகிறது. முகக்கசவம் அணிதல், சமூக இடை வெளியை பின்பற்றுதல் போன்ற வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கைவிட்டு வருகின்றனர்.
இதனை உற்று நோக்கும் போது, பெருந்தொற்றின் முதல் அலை, இரண்டாம் அலையில் இருந்து நாம் பாடம் ஏதும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. ஆகவே, மிகக்குறுகிய காலத்தில் கரோனா மூன்றாம் அலையை நாம் எதிர்பார்க்கலாம்.
இந்தியாவை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் வைரஸின் மூன்றாம் அலை தாக்கக் கூடும். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துதல், வைரஸ் தடுப்பு விதிமுறைகளை கடுமையாக்குதல் போன்ற நடவடிக்கைகளால் மூன்றாம் அலையை நாம் சிறிது வேண்டுமானால் தாமதப்படுத்தலாம். ஆனால், அதனை தவிர்க்க முடியாது. எனவே, மூன்றாம் அலையை எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு ரந்தீன் குளோரியா எச்சரித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm