
செய்திகள் மலேசியா
கேரித் தீவில் அழகிய தமிழ்ப் பள்ளி
கேரித் தீவு:
கேரித் தீவு என்பது மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தீவு. இங்கு இன்றைக்கு ஏறக்குறைய 100 ஆண்டுகள் காலவாக்கில் தமிழகத்திலிருந்து தோட்டங்களில் வேலை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட தமிழ் மக்களின் சந்ததியினர் இன்றும் வாழ்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் மலேசியாவின் பல்வேறு பகுதிகளுக்குக் குடி பெயர்ந்து வாழ்க்கையில் மேம்பாடு அடைந்து சமூகத்தில் சிறந்த செயற்பாட்டாளர்களாகவும் திகழ்கின்றார்கள்.
கேரித் தீவு தமிழ்ப் பள்ளியில் தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி பற்றிய ஒரு விளக்கப் பாடத்தினை மாணவர்களுக்கு வழங்க வந்திருந்தார் பன்னாட்டு மரபு அறக்கட்டளையை சார்ந்த முனைவர் சுபாஷினி.
இனி அந்தப் பள்ளி சூழல் குறித்து அவர் வார்த்தைகளில்...
"மாணவர்களுக்குப் புதிய செய்திகளை அறிந்து கொள்வதில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் இருப்பதை அவர்களது அடுக்கடுக்கான கேள்விகளில் இருந்து நன்றாகப் புரிந்து கொள்ள முடித்தது. ஒரு மணி நேர பாடம் என்பது இரண்டரை மணி நேர பாடமாக மாறியது.
பள்ளி ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களது ஐயங்களையும் நிவர்த்தி செய்து கொண்டனர்.
பள்ளியில் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட பூங்காவில் திருவள்ளுவர் சிலையும் வைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய வகுப்புகள் மனதிற்கு உற்சாகத்தை அளிப்பதால் பள்ளிக்கூடம் என்பது அவர்களுக்கு ஆர்வத்தை வழங்கும் விதமாக அமையும் என்பதை இன்று ஆசிரியர்களும் கலந்துரையாடிய போது அவர்கள் கருத்தாக முன்வைத்தனர்.
இந்த பள்ளி நிகழ்ச்சியை மிகுந்த ஆர்வத்தோடு ஏற்பாடு செய்த திரு. பொன் பெருமாள் அவர்களுக்கும், சகோதரர் திரு சண்முகம் அவர்களுக்கும் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்களுக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும் என்று முடித்தார் மலேசியாவுக்கு குறுகியகால வருகையை மேற்கொண்டுள்ள தமிழ் ஆய்வாளர் வசிக்கும் முனைவர் சுபாஷினி .
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm