நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கோத்தபய ராஜபட்சவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்

கொழும்பு:

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி.யின் கருணை மனுவை ஏற்று விடுவித்தது தொடர்பாக அந்நாட்டு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

இலங்கையில் கோத்தபய ராபட்சவின் ஸ்ரீலங்கா பொதுன பெரமுனா கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பரத லட்சுமண் பிரேமசந்திரா உள்ளிட்ட ஐந்து பேர் கடந்த 2011இல் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. துமிந்தா சில்வாவுக்கு கடந்த 2017இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு கருணை காட்டுமாறு கோரி துமிந்தா சில்வா, அப்போதைய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு கருணை மனு அனுப்பினார்.

அதை ஏற்றுக் கொண்ட கோத்தபய ராஜபட்ச அவருக்கு அதிபரின் மன்னிப்பை அளித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டார். இதையடுத்து துமிந்தா சில்வா, சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

எனினும் துமிந்தா சில்வாவுக்கு கருணை காட்டப்பட்டதை இலங்கை உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு மே மாதம் ரத்து செய்தது. அவரை மீண்டும் கைது செய்யவும் உத்தரவிட்டது.

இது தொடர்பாக பிரேமசந்திராவின் மனைவியும் மகளும் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த மனு மீதான விசாரணையில் பங்கேற்குமாறு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது. அதன்படி அவர் டிசம்பர் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset