செய்திகள் தமிழ் தொடர்புகள்
நவ 21, 22இல் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை:
நவம்பர் 21, 22 தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் மிதமான மழைக்கும் 20 ஆம் தேதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டக் குறிப்பில், காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 18-ஆம் தேதி ஓரிரு இடங்களிலும், 19-ஆம் தேதி கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 10:13 pm
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவு
January 18, 2026, 11:12 pm
நாளை சிபிஐ அலுவலகத்தில் 2ஆம் கட்ட விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்
January 16, 2026, 4:24 pm
திருவள்ளுவர் நாள் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
January 15, 2026, 10:35 pm
தமிழகத்தில் இன்றிரவும் நாளையும் மழைக்கான வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
January 15, 2026, 8:21 am
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள் பங்கேற்க ஏற்பாடு
January 14, 2026, 10:11 pm
